#KarnatakaByElection2018 பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங். – மஜத கூட்டணி

கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகளில் 2 மக்களவை தொகுதி மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் – மஜத கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக ஆறுதல் வெற்றி அடைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது.தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலே சிவமோகா தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் – ம.ஜ.த கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. சிவமோகா தொகுதியில் மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா முன்னிலை பெற்று வந்தார்.

குமாரசாமியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (கோப்புப் படம்)

வாக்கு எண்ணிக்கை முடிவில் மாண்டியா தொகுதியில் மஜத வேட்பாளர் ஷிவரமேகவுடா சுமார் 3 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். பாஜகவின் கோட்டையாக கூறப்பட்ட பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ் உகரப்பா சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஷிவமோகா தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் பி.ஒய்.ராகவேந்திரா 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ராமநகரா சட்டமன்ற தொகுதியில் மஜத சார்பில் போட்டியிட்ட முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நயமகவுடா சுமார் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குமாரசாமி (Image: PTI)

Loading…

“இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றே ஆச்சரியப்பட எதுவும் இல்லை” என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் மக்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

When @narendramodi does not answer questions of the ppl. Ppl will answer during elections.
When @BJP4Karnataka forgets the mandate given by the people & get consumed by their arrogance. Ppl will make them bite the dust. This time it was Ballari mining dust #KarnatakaRejectsBJP

— Siddaramaiah (@siddaramaiah) November 6, 2018

கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது
— P. Chidambaram (@PChidambaram_IN) November 6, 2018

Wish Karnataka Congress JD s bye election victory. My heartfelt congratulations, count down for 2019 parliament election started. @AICCMedia@INCKarnataka#KarnatakaByElection2018 #KarnatakaBypolls #Karnataka #election
— V.Narayanasamy (@VNarayanasami) November 6, 2018

இடைத்தேர்தல் வெற்றியை அடுத்து காங்கிரஸ் – மஜத தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Also See..