Me too பாலியல் சர்ச்சை விவகாரத்தில் வடசென்னை இயக்குனர் கொடுத்த அதிரடி!

#MeToo
#Vetrimaaran

Me too ஹேஷ் டேக்கின் கீழ் அண்மைகாலமாக பலர் பாலியல் புகார்களை கூறிவந்தார்கள். இந்த குற்றச்சாட்டில் சினிமாவில் சில முக்கிய பிரமுகர்களும் சிக்கினர்.வைரமுத்து – சின்மயி, சுசிகணேசன் – லீனா, ஜான் விஜய் – ஸ்ரீ ரஞ்சனி என அடுத்தடுத்து சர்ச்சைகள் தொடர்ந்து. கடந்த காலத்தில் நடந்த பல விசயங்கள் வெளியாகின.இந்நிலையில் அண்மையில் வந்த வடசென்னை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். Me Too விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்ற மனநிலை மாறவேண்டும்Me Too விவகாரம் தொடர்பாக பேசக்கூடிய பெண்களை கேலி செய்யக் கூடாது என அவர் கூறியுள்ளார்.