Pakistan Team: பெண்கள் டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் எங்கே என கேட்ட ரசிகர்கள்- சவுக்கடி கொடுத்த ஐசிசி

பெண்கள் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைப்பெற்று வருகின்றது. இதிலிருந்து பாகிஸ்தான் அணி லீக் போட்டியிலேயே வெளியேறியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் நடைப்பெற்று வரும் பெண்களுக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி கருத்துக் கணிப்பு:அரையிறுதிக்கு முன்னேறியுள்ள 4 அணிகளில் எந்த இரண்டு அணி இறுதிக்கு முன்னேறும் என ஐசிசி டுவிட்டரில் கருத்துக்கணிப்பு ஒன்றை கிரிக்கெட் ரசிகர்களிடம் கேட்டிருந்தது.

Who do you think will contest the @WorldT20 Final? #WT20— ICC (@ICC) 1542585419000
இந்த தொடரி பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று லீக் சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.

பாகிஸ்தான் ரசிகர்கள் கேள்வி:இதுகுறித்து கொஞ்சம் கூட தொரியாத பாகிஸ்தான் ரசிகர்கள் எங்கே பாகிஸ்தான் அணி? என கேள்வி கேட்டுள்ளனர்.

@ICC @WorldT20 Where is Pakistan. — GHULAM SHABEER (@Shabeer_jattak) 1542590332000
ஒருவர் ஐசிசிக்கு கண்ணும் காதும் வேலை செய்யாது போல. நம்பர் 1 பாகிஸ்தான் அணியை போடவில்லை என கூறியுள்ளார்.

@ICC @WorldT20 ICC IS BLIND AND DEAF I THINK. DOESNT KNOW THE NO 1 team— Kash (@westtrenduk) 1542588162000
ஒருவர் பாகிஸ்தான் அணியை மறந்துவிட்டீர்களா என கேட்டுள்ளார்.

@ICC @WorldT20 Pakistan is No. one T20 team you forgot to mention it— شکیل اجمل (@shakeelajmal) 1542592579000

@westtrenduk @ICC @WorldT20 in womens cricket they are no 1???— rohan (@rohan10134) 1542601188000

ஐசிசி பதில் :இதனால் கடுப்பான ஐசிசி, “ஆம் நாங்கள் குறிப்பிட மறந்துவிட்டோம். ஏனென்றால் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.” என கூறி ரசிகர்களை அடக்கியுள்ளது.

The absolute state of these mentions! Pakistan didn’t get out of the #WT20 group stage guys — ICC (@ICC) 1542597440000