தென் தமிழக கடலோரத்தில் மழைக்கு வாய்ப்பு.

மாலத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் தென் கடலோரப் பகுதியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

மாலத்தீவு மற்றும் குமரிக் கடலை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

நேற்று மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலத்தில் 97.52, கோவையில் 97.34, தருமபுரியில் 97.16 டிகிரி பதிவாகியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.