சிவகார்த்திகேயன், அஜித், விஜய் வழியை பின்பற்றுகிறார்

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யை போல் பொது வாழ்வில் நடிகர் சிவகார்த்திகேயனும் அவர்கள் வழியை பின்பற்றியிருக்கிறார்.

நடிகர்கள் படப்பிடிப்பில் வெளியூர், வெளிநாடு என படப்பிடிப்புக்கு செல்வதால், பலர் தன்னுடைய குடும்ப விழாவில் மற்றும் குழந்தைகளின் பள்ளி விழாவில் கலந்துக் கொள்ளாமல் இருப்பார்கள்.
ஆனால், நடிகர் அஜித், படப்பிடிப்பில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், தன்னுடைய மகள் மற்றும் மகன் பள்ளியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகியவற்றில் தவறாமல் கலந்துக் கொள்வார்.
அதுபோல், நடிகர் விஜய் சமீபத்தில் தன்னுடைய மகள் கலந்துக் கொண்ட பூப்பந்தாட்ட போட்டியை நேரில் சென்று பார்த்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும், தன்னுடைய மகள் ஆராதனாவின் பள்ளி ஆண்டு விழாவில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடன் அம்மா மற்றும் மனைவியையும் அழைத்து சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தற்போது இவர் கலந்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.