சுஜா வருணி அதிரடி ஆபாசமாக கமெண்ட் அடித்தவர்களை வெளுத்து வாங்கினார்

சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிகை, பிக்பாஸ் புகழ் சுஜா வருணி.

நடிகர்கள், நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் படம் பற்றிய செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், ரசிகர்களுடன் பேசியும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்கள்.
ஆனால், நடிகர்கள், நடிகைகள் புகைப்படங்களை பதிவு செய்யும் போது அதற்கு சிலர் ஆபாச கமெண்ட்டுகளையும், அநாகரீகமாக புகைப்படங்களை பதிவு செய்தும் வருகிறார்கள்.
இதற்கு சில நடிகைகள் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் சுஜா வருணி, தன்னுடைய புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார்.
எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை. எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை என்று பதிவு செய்து, தன்னுடைய புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களை ஸ்கீரின்ஷாட்டுடன் பதிவு செய்து அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
மேலும், இதுபோன்றவர்களுக்கு அஞ்சக் கூடாது. அவர்களை தைரியமாக வெளிக்காட்டுங்கள். நான் ஒரு நடிகை. சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம்.
இந்த ஆடை தான் உங்களுக்கு பிரச்னையா? அப்படியென்றால் சிறு குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகீறார்கள் ஏன்? நாங்கள் பிரச்னை இல்லை.
நீங்கள் தான். உங்களது காம வெறி தான் பிரச்னை. இன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக்கொள்ளலாம் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.