சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீரர் சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுதில் குமார், தென்ஆப்ரிக்க வீரர் ஜொகன்னஸ் போத்தாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சுதில் குமார் 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தென்ஆப்ரிக்க வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
இது காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது பதக்கமாகும்.
இதன்மூலம், இந்தியா 14 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.