டாடா H7X இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் H7X எஸ்யுவி மாடலை சோதனை செய்து வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் H5X எஸ்யுவி கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது.
இந்த மாடல் பூனேவி்ல் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், டாடா H7X ஆடம்பர எஸ்யுவி சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
ஊட்டியில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் டாடா H7X விவரங்கள் வெளியாகியுள்ளது.
டாடா H7X ஏழு பேர் அமரக்கூடிய வகையில் மூன்றடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது.
புதிய டாடா H5X மற்றும் H7X கார்கள் L550 பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
டாடா H5X போன்று H7X மாடலும் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மாடலில் தற்காலிக ஹெட்லைட், இன்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
டாடா H7X எஸ்யுவி H5X மாடலை விட நீளமாக இருக்கிறது.
இத்துடன் அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ், தடிமனான பில்லர்கள் மற்றும் பெரிய அலாய் வீல்கள் கொண்டுள்ளது.
புதிய டாடா H7X வடிவமைப்பு டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
டாடா H7X உள்புறத்தில் அதிக இடவசதி மற்றும் ஆடம்பர கேபின் கொண்டுள்ளது. இத்துடன் ஹெச்டி இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, சன்ரூஃப், சரவுண்டு சிஸ்டம், ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை டாடா H7X மாடலில் 2-லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 170 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ZF சார்ந்த 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.