உத்தரப்பிரதேசத்தி மற்றோறு சம்பவம் ஆக்சிஜன் சிலிண்டருடன் காத்திருக்கும் மூதாட்டி

உத்தரப்பிரதேசம் ஆக்ரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வராததால் ஆக்சிஜன் சிலிண்டருடன் மூதாட்டி வெளியே நிற்கவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலம் குன்றிய மூதாட்டி ஒருவர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆக்சிஜன் மாஸ்க் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரை வேறு வார்டுக்கு மாற்றுவதற்காக வெளியே அழைத்து வரப்பட்டார்.

ஆனால் வெகு நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் மூதாட்டியின் மகன் ஆம்புலன்சை தோளில் வைத்திருக்க அவர் வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நோயாளியை ஆம்புலன்சில் அழைத்துச் செல்லாமல் வெளியே நிற்க வைத்தது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நிர்வாகம், மூதாட்டியை வார்டு பாய் தான் அழைத்து வந்தார்.

அவர் சிலிண்டரை மூதாட்டியின் மகனிடம் கொடுத்த நேரத்தில் யாரோ புகைப்படம் எடுத்துள்ளனர் என தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வட மாநிலங்களில் இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவால் பல நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.