காமன்வெல்த் 2018 பளுதூக்குதலில் வெங்கட் ராகுல் சாதனை

காமன்வெல்த் போட்டியில் 85 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் வெங்கட் ராகுல் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 85 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இந்தியா சார்பில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட் ராகுல் ரகாலா கலந்து கொண்டார்.

இவர் ஸ்னட்ச் முறையில் 151 கிலோவும், க்ளீன்-ஜேர்க் முறையில் 187 கிலோ எடையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 338 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.

சமோயா வீரர் 331 கிலோ எடையை தூக்கி வெள்ளியும், மலேசிய வீரர் 328 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கமும் வென்றனர்.

இந்த தங்கப் பதக்கம் மூலம் இந்தியா பளுதூக்குதல் போட்டியில் நான்கு தங்கத்தை கைப்பற்றியுள்ளது.