அதிக அளவு வெப்பம் நிலவும் – வானிலை மையம் அறிவிப்பு

இந்திய மாநிலங்களில் வழக்கமான கோடை காலத்தில் இருக்கும் வெயில் அளவை விட இந்த ஆண்டு 1 டிகிரியைவிட அதிக வெப்பம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வழக்கமாக நிலவும் வெப்ப அளவை விட 1 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கமான அளவை விட அதிகபட்சமாக 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், மலைப் பகுதி மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வழக்கமான அளவை விட 3 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கலாம்.

அதே போல, மார்ச் மாதம் முதல் தென்னிந்திய மாநிலங்களிலும், நான்கு வடகிழக்கு மாநிலங்களிலும் வெப்ப நிலை படிப்படியாக உயரும். இந்தியாவில் வழக்கமாக மார்ச் முதல் ஜூலை மாதம் வரை கடுமையான வெப்பமும், வெப்பக் காற்றும் வீசுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed, but trackbacks and pingbacks are open.